தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடிய நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்

0 104
Stalin trichy visit

திருச்சி, டிச.26 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் தேசிய விவசாயிகள் தினம் நகர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், நகர் கிராமத்தில்  தேசிய விவசாயிகள் தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேசிய விவசாயிகள் தினம் என்பது விவசாயிகள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பொறுப்புள்ள அனைத்து விவசாயிகளையும் பாராட்டி கௌரவிக்க, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு லால்குடி ஒன்றியத்தின் வேளாண்மை உதவி இயக்குனர் எஸ். சத்தியபிரியா, நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர்  அல்லி இங்கர்சால் , நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெ.வெங்கட பிரபு, முனைவர்  இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் பா.குணா  ,  உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ம. சுரேஷ்முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ப. நந்தகுமார்  மற்றும் ஆர். பிரவீன் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வினோத், சாம் குமார், சுரேந்தர், சந்தோஷ், சக்தி, ராஜேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் சிறப்பாக நடத்த வழி வகுத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர் கிராமத்தில் வசித்து வரும் எள்ளு பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

இதில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் விவசாயிகளின் பங்களிப்பை பற்றியும் மக்கள் முன் எடுத்துக் கூறினார். முனைவர் பா.குணா பயிர் காப்பீடு திட்டம் பற்றியும் அதன் பயன் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர்  சத்தியபிரியா எள்ளு பயிருக்கு வழங்கப்படும் மானியம் குறித்தும் எள்ளுப் பயிரில் ஏற்படும் பூச்சி தாக்குதல் நோய் தாக்குதலின் அறிகுறி பற்றியும் அதற்கான மேலாண்மை முறையைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.