வாழை விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 175
Stalin trichy visit

திருச்சி, டிச.26 வாழை விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சாத்தமங்கலத்தில் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் வாழை விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் லால்குடி வட்டாரத்தில் தங்கி விவசாயிகளுடன் பல்வேறு களப்பணிகள் ஆற்றி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக லால்குடி அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயிகளுக்கு ,வாழை மரத்திற்கு முட்டுக் கொடுத்தல் மற்றும் பொய்யான வாழை தண்டனை கொண்டு அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை பற்றியும் அதன் பயன்பாடுகளை குறித்தும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினர். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.

வாழை மரத்திற்கு எந்த நேரத்தில் முட்டு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கான பயன்கள் குறித்தும் அதில் ஏற்படும் நஷ்டங்களை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அந்து பூச்சி பொறியியினை எவ்வாறு தயார் செய்ய வேண்டும், .எந்த நேரத்தில் அதை உபயோகிக்க வேண்டும் என்பதனை பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் தெளிவாக செய்முறை விளக்கம் மூலம் எடுத்துக் கூறினர்.

இதனை செய்முறை விளக்கமாக ச.வினோத், ஜா. சாம்குமார், ஜெ. சுரேந்தர், பு. சக்தி , ச.சந்தோஷ் , க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மை கல்லூரியில் முதல்வர், முனைவர் ஜெ.வெங்கட பிரபு, முனைவர் பா. குணா இணை பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் , திரு. ப. நந்தகுமார் முதல்நிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், திரு.ம. சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்து முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.