வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு

0 44
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30 திருச்சி சுப்பிரமணியபுரம் பழையபாண்டியன்தெருவை இவருடைய மனைவி மல் லிகா (வயது 74). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி சேர்ந்தவர் வள்ளியப்பன். விட்டு குடும்பத்தினருடன் – திருமயத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பி – டுவதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த 26-ந் தேதி மாலை மீண்டும். வீடு திரும்பினர். அப்போது  அவர்களுடைய வீட்டின் – பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், 20 சிறிய வைரக்கற்கள் ஆகியவற்றை திருடி சென்று இருந்தனர். இது குறித்து மல்லிகா கே. கே.நகர் குற்றப்பிரிவு போலீ சாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணைநடத்தினார்கள். விசாரணையில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டைஉடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றது தெரியவந் தது. இதையடுத்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டமர்மநபர் களை வலைவீசி தேடி வருகி றார்கள்.

மற்றொரு சம்பவம்
திருச்சி காஜாமலை டி.வி. எஸ்.நகரை சேர்ந்தவர் சுதாகர் (56). இவருடைய தாய் சம்பவத்தன்று வீட்டின் முன் பக்கஅறை அருகே வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 4 மர்ம ஆசாமிகள் வந்தனர். இவர்கள் அந்தபெண்ணிடம் வீடு வாடகைக்கு இருக்கி றதா? என்று கேட்டு பேச்சு கொடுத்தனர். அவர் பேசி கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 8பவுன் நகையை பறித் தார். பின்னர் 4 பேரும் அங்கிருந்து ஓடி மோட்டார் சைக் கிளில் ஏறி தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து தனது மகன் சுதாகரிடம் கூறி னார். சுதாகர் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து, 8 பவுன் நகையை பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.