பார்சலில் போதை மாத்திரைகள் : பெண் கைது
திருச்சி, ஜூலை 30 சமயபுரத்தில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்திற்கு சந் தேகப்படும்படி ஒரு பார்சல் வந்துள்ளதாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு ரகசிய தக வல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசா ரணையில் நாக்பூரில் இருந்து சமயபுரத்திற்கு வந்த பார்சலில் சுமார் 1000 போதை மாத் திரைகள் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக பார்சலின் கவரில் அனுப்புகிறவர் பெயர், பெறுபவர் பெயர் வெவ்வேறு முகவரியில் இருந்ததும், அதில் எழுதப் பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் சம் பந்தப்பட்ட நபர் போதை மாத்திரைகளை வாங்கி செல் வதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் செல்போன் எண்ணை வாங்கி பேசிய போது இச் சம்பவத்தில் ஈடுபட்டது. திருச்சி, தாராநல்லூர், கீரைக் கடை புது தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முகம துயாசர் மனைவி ஆஷிகா பானு (வயது 22) என தெரிய வந்தது. அவர் அந்த மாத்தி ரைகளை பல்வேறு நபர்க ளுக்கு விற்பனை செய்வதற் காகவாங்கியது யது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆஷிகா பானுவை கைது செய்து போதை மாத்திரை களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆஷிகா பானு மீது போதை மாத்திரை கள் விற்பனை செய்தது தொடர்பாக 10-க்கும் மேற் பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.