கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30 திருச்சி தெப்பக்குளம் சேர்ந்த பாரதியார் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழவியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குப்பாங்குளம் மதுரைரோடு வழியாக காந்திமார்க்கெட் டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் விஜயகுமாரை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட் டார். அவர் தர மறுத்ததால். கத்தியை காட்டி மிரட்டி .ரூ.500 பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் காந் திமார்க்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து, வழிப் பறி செய்ததாக தென்னூரை சேர்ந்த குருமூர்த்தி என்ற காட்டுராஜாவை (25) கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.