வேளாண் கண்காட்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு

0 164
Stalin trichy visit

திருச்சி, டிச.29  வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் டிசம்பர் 27 அன்று திருவண்ணாமலையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது இதில் அரசு துறைகள் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை, பொறியியல் துறை சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செயல் விளக்கத்திடல்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் லால்குடி வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமயங்குடி, செம்பரை, பூவாளூர், நெய்குப்பை, புதூர் உத்தமனூர் , வாளாடி, மேலபெருங்காவூர் திருமங்கலம், கோமக்குடி, அரியூர், ஆலங்குடி மகாஜனம், தச்சங்குறிச்சி, கீழப்பெருங்காவூர், சிறுமயங்குடி கிராமத்திலிருந்து இரண்டாவது நாள் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வேளாண் தோட்டக்கலைத் துறை புதிய ரகங்கள், வேளாண்மை துறை திட்ட விளக்க செயல்விளக்கத் திடல் பார்வையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதற்கான ஏற்பாட்டினை திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்  பூ.வசந்தா வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன், வேளாண்மை உதவி இயக்குனர் லால்குடி வட்டாரம் திருமதி சி.சத்யப்பிரியா , தோட்டக்கலை உதவி இயக்குனர் தனசேகர், வேளாண்மை அலுவலர் கௌசல்யா, துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி லால்குடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் , அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.