அரியூர் ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

0 224
Stalin trichy visit

திருச்சி, டிச.30 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பரமபத வாசல் திறப்பு விழா என்பது வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாகும் இது மார்கழி மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் போது பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்நிலையில் லால்குடி அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உற்சவ ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து பரமபத வாசல் திறக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தில் திருமணம் ஆகாத ஆண்கள்,பெண்கள் இரண்டு மாலைகளுடன் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டால் விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது குறிப்பிட்டத் தக்கது.இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.