திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காட்டூரில் வட்டங்கள் வாரியாக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

0 28
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 27  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு மாநகரம் – காட்டூர் பகுதியில், வட்டங்கள் வாரியாக கழக நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கழகச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து, கழக வளர்ச்சிப் பணிகள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்வில், திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதிச்செயலாளர் நீலமேகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மற்றும் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட வட்டக் கழக செயலாளர் பி எல் 2 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.