திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு ஒன்றியம், கூத்தைப்பார், துவாக்குடி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 27  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை ஏற்றார் இந்தக் கூட்டத்தில், கழக வளர்ச்சி மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையில் கழக நிர்வாகிகளிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் ஒன்றியக் கழகச் செயலாளர் கங்காதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், கிளைகழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பி.எல்.ஏ.2 உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூத்தைப்பார் பேரூராட்சி

கூத்தைப்பார் பேரூரில் உள்ள 15 வார்டுகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடனான சிறப்புக் கலந்துரையாட்டுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை தாங்கி, கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு நிர்வாகிகளோடும் நேரில் கலந்துரையாடினார். அப்போது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழகத்தின் ஆக்கப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, கட்சியினருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி, பேரூர் செயலாளர் தங்கவேலு உள்ளிட்ட முன்னணி கழகச் செயலாளர்களும், பேரூராட்சி வார்டு நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

துவாக்குடி

 துவாக்குடி நகர வட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. oசெயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கழக வளர்ச்சி, பணிகள், கழகத்தை வலுப்படுத்துவது,மக்களு
டனான தொடர்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வட்டக் கழக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாகிகள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயம்பூ, ,மற்றும் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.