வெளிநாட்டு மதுபானம் கடத்தியவர் கைது

0 139
Stalin trichy visit

திருச்சி, ஜன.5திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே துவாக்குடி இன்ஸ் பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் (26) என்பதும், அவர் தனது பைக்கில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 10 வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கார்த்திக்கை கைது செய்து, பைக் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல் துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்த போது தனபால் (வயது 42) என்பவர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தனபாலை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 6000 மதிப்புள்ள 40 கோட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் தனபால் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.