துவாக்குடி திருநெடுங்களநாதர கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு அபிஷேகங்கள், தீபாராதனை

0 74
Stalin trichy visit

திருச்சி, ஜன.5  திருச்சி துவாக்குடியில் உள்ள அருள்மிகு ஒப்பிலாநாயகி உடனுறை அருள்மிகு திருநெடுங்களநாதர கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான ஒப்பிலா நாயகி உடனுறை அருள்மிகு திருநெடுங்களநாதர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர்களான நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு மஞ்சள், திராவியபொடி, அரிசி மாவு, பழ வகைகள், தேன், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, பால், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாம சுந்தரி, மற்றும் மாணிக்கவாசகருக்கு பல்வேறு மலர்கள் , ஆபரணங்கள், மற்றும் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நேற்று (ஜன.4) நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் , கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.