ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு : திரிசூலம், வேல் வடிவில் நின்று மாணவிகள் சாதனை

0 120
Stalin trichy visit

திருச்சி, ஜன.5 முசிறியில் ‘அப்பனும் அழகனும்’ நாட்டிய நிகழ்வு – திரிசூலம், வேல் வடிவில் நின்று மாணவிகள் சாதனை இசா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்..

திருச்சி மாவட்டம், முசிறியில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பரதநாட்டிய கலைஞர்கள் திரிசூலம் மற்றும் வேல் வடிவில் அணிவகுத்து நின்று நடனமாடி ‘இசா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்,

சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர நாளன்று, திருச்சி மாவட்டம், முசிறியில் செயல்படும் இசை மற்றும் நடனப்பள்ளி மாணவிகள் 108 பேர் இணைந்து ‘அப்பனும் அழகனும்’ என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் சிவபெருமானின் ஆயுதமான திரிசூலம் மற்றும் முருகப்பெருமானின் ஆயுதமான வேல் வடிவங்களில் மாணவிகள் நின்று நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது, மேலும் தமிழ் எழுத்துக்களுக்கு அபிநயம் பிடித்தும், பாரதியாரின் பாடல்களுக்கு ஒரே நேரத்தில் பல கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தியது சிறப்பாக அமைந்திருந்தது,

இந்தசாதனை நிகழ்வை தொடர்ந்து மாணவிகளின் திறமையைப் பாராட்டி பலரும் வாழ்த்தி பேசினர், சாதனை படைத்த மாணவிகளுக்கு ‘இசா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்’ அமைப்பின் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது, இதில் நடனப்பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.