முசிறியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

0 192
Stalin trichy visit

திருச்சி , ஜன , 26 திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் நேற்று மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்குமாவட்ட மாணவரணி அமைப்பாளர் வருண்ராஜ் தலைமை வகித்தார். திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் , தலைமை கழக பேச்சாளர்கள் மருதுஅழகுராஜ், சேலம் கோவிந்தன், அலிமாஸ் அலி ஆகியோர் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளின் நோக்கம் குறித்தும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து வரும் நன்மைகள் குறித்து விரிவாக பேசினர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அகத்தீஸ்வரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.

அதனை தொடர்ந்து முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பேசும்போது தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தமிழக மக்களின் நலன்களை காத்திட அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர்.மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், மாணவ மாணவிகளுக்கு மேன்மையான கல்வியை வழங்கிடவும், வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பாடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நீட் தேர்வு, தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது, இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிப்பது, என பல்வேறு இடையூறுகளை தினசரி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அத்தனை இடையூறையும் எதிர்கொண்டு தமிழக மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க பொதுமக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கே.கே ஆர்.சேகரன், பெரியசாமி, திருஞானம், அண்ணாதுரை, முத்துச்செல்வன், வீரபத்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன்,நகர செயலாளர்கள் தக்காளி தங்கராசு,
சிவக்குமார்,விஜய் ஆனந்த், சுப்ரமணியன்,
இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி,
நிர்வாகிகள் பிரபாகரன்,சப்தரிஷி,சிவ.நடராஜன்,
கல்விநாயகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
இறுதியில் முசிறி நகர செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.