தேர்தலுக்கு முன்பாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

0 210
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியமன தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேசியது :

கடந்த 2023 – 2024 ஆண்டு நடைபெற்ற BT- BRTE தேர்வில் BT பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டு விட்டன. அதில், நிரப்பப்படாத பணியிடத்தை 825 நிரப்ப வேண்டும். மேலும் 2024-2025 ஆம் ஆண்டு TRB ஆண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கி, இன்னும் தேர்வு வைக்கப்படாமல் உள்ள 1205 BT – BRTE காலி பணியிடங்கள் முழுவதையும் ஏற்கனவே நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். BT பணியிடம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் BRTE பணியிடம் 15 ஆண்டுகளுக்கும் பிறகும் நடைபெற்ற தேர்வில் BT மட்டும் 2800 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் BRTE பணியிடம் சுமார் 825 இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. எப்போதெல்லாம் BT- BRTE தேர்வு நடைபெற்றதோ, அப்போதெல்லாம் இரண்டு பதவிகளுக்கான பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மட்டும் BRTE காலி
பணியிடம் நிரப்பப்படாமல் விதி விலக்காக உள்ளது.

BT பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு வைத்துவிட்டு, அதில் அறிவிக்காத BRTE பணியிடங்கள் நிரப்பப்பட்ட வரலாறும் உண்டு. BT பணியிடங்கங்களை பொறுத்தளவில் அறிவிக்கையில் கூறியதை விட கூடுதலாக தான் தற்போது வரை நிரப்பப்பட்டுள்ளன, ஆனால் தற்போது மிக மிகக் குறைவாக நிரப்பப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன் கீழ் ஜனவரி 2026-க்குள் 19,200 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார். ஆனால் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. அதை நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை கொண்டு முழுவதுமாக நிரப்புங்கள் என்றனர். மேலும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு காலி பணியிடங்களை முழுவதும் நிரப்பிவிட்டு, மறுதேர்வு வைக்க வேண்டும். குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கிடைத்த தகவலின்படி, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் சுமார் 10000-த்திற்கும் மேலும், வட்டார வளமைய ஆசிரியர் காலிப்பணியிடம் சுமார் 825 இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 12 வருடமாக காத்திருந்து, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பவும் என தெரிவித்தனர்.

மேலும் எங்கள் கோரிக்கையை தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.