இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. பாதுகாப்பு அரண் : தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் பேட்டி

0 169
Stalin trichy visit

திருச்சி, பிப்.2திருச்சி, பிப்.2 இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக விளங்குகிறது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், முஸ்லீம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு பெற்று 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனை 7% என உயர்த்திவழங்க வேண்டும். முதற்கட்டமாக திமுக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு வேலை, கல்வி உள்ளிட்ட பிற துறைகளிலும் 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? என்பதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அண்மையில் கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி சிறைவாசிகளை இனியும் காலம்தாழ்த்தாமல் விடுவிக்க ஆவணசெய்ய வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொடுத்து, Nrc, caa சட்டங்களை எதிர்த்து, மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு துணையாக நின்று, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிய திமுகவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சிக்கந்தர் தர்கா விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு என்பது வரலாற்று ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் வழங்க வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும்.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.