திருச்சி மகப்பேறு – மகளிர் மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் (TRIOGS) சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் சார்மிளா அய்யாவூ பதவி ஏற்றார். துணைத் தலைவர்களாக டாக்டர் விக்டோரியா ஜான்ஸ்டன் மற்றும் டாக்டர் கவிதா செந்தில் ஆகியோரும், செயலாளராக டாக்டர் விஜயப்ரபா செழியன், இணை செயலாளராக டாக்டர் லாவண்யா சி., பொருளாளராக டாக்டர் உமா வைத்தியநாதன் ஆகியோர் பதவி ஏற்றனர்.
விழாவில் மூத்த மருத்துவ நிபுணர்களான டாக்டர் மதுரி பட்டேல், டாக்டர் ராஜஸ்ரீ பலாடி மற்றும் டாக்டர் கே.யு. குஞ்சி மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பதவி ஏற்பு செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் அமர்வில் பிசிஓஎஸ் குறித்த சமீபத்திய தகவல்கள் மற்றும் மகப்பேறு பராமரிப்பு மற்றும் கருப்பை நார் கட்டிகளால் ஏற்படும் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கின் மேலாண்மை குறித்த புதுமையான அணுகுமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.