தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளது : அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு

0 136
Stalin trichy visit

திருச்சி, பிப்.2  இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு

திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிறுவனரும் தி.க தலைவருமான கி.வீரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு பட்டங்களை வழஙகினார். இதில் இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட 125 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக உரையாற்றிய வீரமணி, இங்கு படித்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். பெரியாரின் சொற்பொழிவை ‘இனி ஒரு உலகம்’ என்கிற பெயரில் புத்தகமாக அண்ணா வெளியிட்டார். அதில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி குறித்து 90 ஆண்டுகளுக்கு முன்பே பேசி உள்ளார். அதனால் தான் அவர் பெரியார்.
பெரியார் சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து அறக்கட்டளை தொடங்கினார். அதன் பயன் தான் இன்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் எல்லாம் தான். செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் பலன்கள் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது, அதே நேரத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்தால் கவலையும் அதிகம் வருகிறது.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்கு பெறுமை.
செயற்கை நுண்ணறிவால் மனித வேலை வாய்ப்பு பறிபோகும் என்கிற அச்சம் தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாம் மூளையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளோம். மூளையின் மற்ற பகுதிகளை பயன்படுத்த வேண்டிய தேவை வந்துள்ளது.
மனித பெருக்கத்தால் உணவு நெருக்கடி ஏற்படும் என்றார்கள் ஆனால் உணவு உற்பத்தியை அதிகரித்து அதை சமாளித்து இன்று பட்டனி இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம்.
அதே போல அறிவு பெருக்கத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை நாம் சந்திப்போம்.
அறிவை சுதந்திரமாக விடுங்கள். பட்டதாரிகளாக மட்டுமல்ல பகுத்தறிவாதிகளாக இருக்க வேண்டும் என்றார்.

சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்ரமபியன், உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள். இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க இளம்பெண்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக ஐ.நா சபை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது.
மருத்துவ துறையில் மட்டும் 38274 பேருக்கு வெளிப்படை தன்மையோடு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 16780 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வாக இருந்தாலும் பணி இட மாறுதலாக இருந்தாலும் வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறோம். இதனால் 59,985 பேர் பயனடைந்துள்ளனர்.
சுகாதார துறையில் காலிப்பணியிடங்களே இருக்க கூடாது என்கிற வகையில் செயல்பட்டு வருகிறோம்.
நான் முதல்வன், புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் பல லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
ஒன்றிய அளவில் உயர்கல்வியில் சேரும் சதவீதம் 28.4 சதவீதமாக உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் 47 சதவீதமாக இருக்கிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.