துறையூரில் த.வெ.க.வின் 3-ம் ஆண்டு தொடக்க விழா
துறையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் சமூகப் பணியாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் P. ஜெகன்மோகன் தலைமையேற்றார். மாவட்ட இணை செயலாளர் B. மதன், நகர செயலாளர் வினோத் (தெ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் தெற்கு ஒன்றிய செயலாளர் N. சுதாகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா, மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.
உப்பிலியபுரம் பகுதிகளில் இருந்து வடக்கு ஒன்றிய செயலாளர் குணா, மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகம், பேரூர் கழக செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கவியரசன், சதாசிவம், நாகராஜ் ஆகியோருடன், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அன்னதானம் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, கழகத்தின் ஆண்டு விழா சமூகப் பொறுப்புணர்வுடன் கொண்டாடப்பட்டது.