தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 100
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் திருச்சி அமராவதியில் நடைபெறும் குறைபாடுகளை தட்டிக் கேட்ட சங்க நிர்வாகியை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதை கண்டித்தும் அமராவதி நிர்வாகம் சார்பில் இயங்கிவரும் கடைகளின் வாடகையை நிர்வாகம் வழங்க வேண்டும் ஆனால் ஊழியர்களே கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் மேலும் இந்நிறுவனத்தில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அவ்வாறு கட்டுப்பாடற்ற பொருட்களை அமராவதி பெயரில் கொள்முதல் செய்து அதிகாரிகள் வெளிச்சந்தையில் விற்பதாகவும் இதை தட்டி கேட்ட பணியாளர் மீது கொலை மிரட்டல் விடுவதாகவும் பணியாளரின் மகன் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு மிரட்டி வருவததாகவும் நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து உள்ளதைக் கண்டித்தும் அமராவதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மூன்று கோடி ரூபாய் வரவில்லை எனவும் இதை தட்டி கேட்டால் நிர்வாகம் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.