கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி மீட்பு : மனித நேயத்துடன் செயல்பட்ட பொதுமக்கள்
திருச்சி, பிப்.3 மணப்பாறை அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி
மனித நேயத்துடன் செயல்பட்ட மக்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் ஆதரவற்ற மூதாட்டி தவறி விழுந்ததை அறிந்த மக்கள் உடனே அவரை மீட்டனர். இந்நிலையில் உடல்முழுவதும் கழிவு நீராக இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த மணப்பாறை நீதிமன்ற சார்பு நீதிபதி ராஜசேகரன் இதைப்பார்த்து உடனே அந்த பெண்களுக்கு உணவு உள்ளிட்டவைகளை வாங்கி வந்து கொடுத்தார்.
இதே போல் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் அந்த பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்யும் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்த பெண்களின் உதவியுடன் அதே பகுதியில் துணியை வைத்து மறப்பு அமைத்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக பணியில் இருந்த அவசர கால மருத்துவ நிபுணர் புஷ்பலதா அந்தப் பெண்ணை குளிப்பாட்டி உடை மாற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிசi;சக்காக அனுமதித்தனர். கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த பெண்ணிற்கு உடனடியாக மனிதநேயத்துடன் செயல்பட்ட மக்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.