மணப்பாறை அருகே தரமற்ற முறையில் சாலை அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

0 130
Stalin trichy visit

திருச்சி, பிப்.3 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியில் இருந்து முத்தபுடையான்பட்டி செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை அமைக்கும் போது முறையாக அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும் இரவோடு இரவாக சாலை அமைக்கப்பட்டதாக கூறடுப்படுகின்றது. அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் சாலை மிகவும் மோசமாக கையில் தொட்டாலே கையோடு பெயர்ந்து கொண்டு வரும் நிலையில் இருந்ததை அறிந்த மக்கள் இன்று தரமற்ற சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். சாலை மிகவும் தரமற்ற நிலையில் உள்ளதை அறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்து மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவரிடம் கேட்ட போது முறையாக சாலை அமைக்க ஒப்பந்தகாரரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.