பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு

0 126
Stalin trichy visit

திருச்சி, பிப்.3 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருச்சி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி,  கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் டென்சியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சமூக வலைதளங்களின் பயன்பாடு, ஆகியவற்றைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ஜாஃபர் மற்றும் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.