அரசு விழாவில் ரூ.13.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்கள் வழங்கினர்

0 115
Stalin trichy visit

திருச்சி, பிப்.4 திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநராட்சி ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிராவன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) சுரேஷ், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.