காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பனையேறும் தொழிலாளர்கள்

0 96
Stalin trichy visit

திருச்சி,பிப்.4  திருச்சி மாவட்டம் முசிறி அருகே துறையூர் பகுதியை சேர்ந்த பனையேறும் தொழிலாளர்களை முசிறி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்ததால் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் துறையூர் வட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது பனையேறும் தொழிலாளர் ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தகவல் அந்த உறவினர்கள் முசிறி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

கள் இறக்குவதற்கு மாநில அரசு ,மத்திய அரசு அனுமதி இருந்தும் கைது செய்து நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.. அதன் பிறகு வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் பேச்சு வார்த்தைக்கு‌ பிறகு போலீசார் ராஜேந்திரனை விடுவித்து ராஜா என்பவரை கைது செய்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிய நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.