அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் போராட்டம்
திருச்சி, பிப். 5 தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 328 உதவி பேராசிரியர்கள் பல்வேறு துறைகளில் கடந்த 2010முதல் பணியாற்றிவருகின்றனர்.
இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 48 தற்காலிக உதவி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதமுதல் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்கள் தற்போது 27ஆயிரம்ரூபாய் தொகுப்பு ஊதியம்பெற்றாலும், நிரந்தர ஊழியர்களைப்போன்று பணியாற்றிவருகின்றனர். 2019ம் ஆண்டு பிறகு தற்போதுவரை சம்பள உயர்வு வழங்கப்படாததால் மனவேதனையில் தங்களது ஆசிரியர் பணியை தொடர்ந்துசெய்துவருகின்றனர்.
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, தேர்தல் வாக்குறுதி எண் 153ன் படி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தங்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என்றும் 15 ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் வேலை பணிநீக்கம் செய்ததை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றைய தினம் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி எதிரில் தமிழக அரசையும், அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்தும் உதவி பேராசிரியர்கள் 48 பேர் காலவரையற்ற தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் அல்லது சமஊதியம் வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனைநிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புசெய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
லேப் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதம் இருக்கவேண்டும், ஆனால் 60 பேருக்கு ஒரு ஆசிரியர் என்று உதவி பேராசிரியர்களுக்கு அதிக பனிச்சுமையை ஏற்படுத்துகிறது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் உள்ள 10துறைகளில்,
நிரந்தர உதவிபேராசிரியர்களாக 87பேர் பணியாற்றிவருகின்றனர், தற்காலிக உதவி பேராசிரியர்களாக பணியாற்றிவந்த 48 பேரை பணிநீக்கம் செய்ததால், நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து நிரந்தர உதவிபேராசிரியர்களும் நாளை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் டீன், உயர் கல்வித் துறை அமைச்சர், பதிவாளர் மற்றும் இயக்குனர் என அனைவரையும் சந்தித்து பலமுறை மனுஅளித்தும் தற்போதுவரை தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள உதவி பேராசிரியர்கள் கொத்தடிமைகளாகவே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். உதவி பேராசிரியர்களின் போராட்டத்தின் காரணமாக தற்போது, பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள பருவத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாத நிலை உள்ளது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியிலிருந்து ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்து வெளியேறும்நிலையில் உதவி பேராசிரியர்களை கண்டுகொள்ளாமல், அவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும்நோக்குடன் தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.