100 நாள் வேலையை ஒழிக்க நினைக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் அமைதி ஊர்வலம் : மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேட்டி
திருச்சி, பிப். 5 திருச்சி மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து மாபெரும் அமைதி ஊர்வலம். திருச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேட்டி
திருச்சி_ மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி ஒழிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து நடைபெறும் மண்டல அளவிலான மாபெரும் அமைதி ஊர்வலம் குறித்து ஆயுத்த கூட்டம் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் ரெக்ஸ் கூறுகையில். மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கோடி கணக்கான மக்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார அந்தஸ்தை அடிப்படை உரிமை ஆக்கி உள்ளனர் குறிப்பாக ஒரு திட்டத்தால் பெண்கள் பழங்குடியின மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் கிராமப்புற வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது குறைந்த நிதிநிதி வழங்குவது, ஊதிய வழங்குவதை தாமதப்படுத்துவது திட்டத்தை தீவிரமாக பாதிக்கிறது பொருளாதார உதவி வழங்காமல் மாநிலங்கள் மேல் சுமையை தெளிப்பது திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விக்குறியாகிவிடும் எனவே மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு உறுதி படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செங்கல்பட்டு மாவட்டம் சென்னை தாம்பரத்தில் மாபெரும் அமைதி ஊர்வலம் நடத்தி அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை திருச்சி மாவட்டத்திலும் பின்னர் திண்டுக்கல் தென்காசி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளதாக கூறினார். இந்த நடைப்பயணத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ் ராஜேஷ்குமார் . அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரீஸ் சோடாங்கர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் எம் என் சூரஜ் MN நிவேதிக் அல்வா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பேட்டியின் போது வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் ஈ எம் சரவணன். தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்