விவசாயி விஷம் குடித்து தற்கொலை

0 131
Stalin trichy visit

திருச்சி பிப். 6  திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் பெரகம்பி குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 63) விவசாயி. இவர் விவசாயத்தை கவனித்துக் கொண்டு கால்நடைகளும் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் பட்டிக்கையில் அடைத்து வைத்திருந்த கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமணன் விவசாயத் தோட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் சதீஷ்குமார் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பசுமாடுகள் மரித்த துக்கம் தாங்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.