மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு புதிதாக தேர்செய்யும் பணி : அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்சி பிப் 6 – திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் அம்மனுக்கு ரூ 57.80 லட்சம் செலவில் புதிதாக தேர் செய்யும் பணி அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் அம்மனுக்கு தனியார் நிறுவனம் ( லயன் டேட்ஸ்) சார்பில் ரூ.57.80 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தேரோட்டத்தின்போது சோமாஸ்கந்தராக தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை அம்மன் ஒரு தேரிலும், மட்டுவார்குழலம்மை அம்மன் தனித் தேரிலும் மற்றும் பஞ்சமூர்த்திகள் தனியாக சப்பரத்திலும் எழுந்தருளுவது வழக்கம். இதில் அம்மன் தேரின் உள் பகுதி சேதமடைந்து மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதையடுத்து, அதற்குப் பதிலாக புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியில் உள்ள லயன் டேட்ஸ் நிறுவனம் ரு.57.80 லட்சம் மதிப்பில் புதிய தேர் உபயமாக வழங்க முன் வந்தது. அதன்படி, 13 அடி அகலம் மற்றும் 29 அடி உயரத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த மரச்சிற்ப கலைஞர்களைக் கொண்டு புதிய தேர் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, எம் எல் ஏ,
இனிகோ இருதய ராஜ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் அருட்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் கருணாநிதி, கலைச்செல்வி, ஸ்ரீதர், கோவிந்தராஜு மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.