தமிழகத்திற்கு ‘முட்டை’ நிதி! – மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

0 124
Stalin trichy visit

திருச்சி, பிப்.7 முசிறியில் பரபரப்பு – தமிழகத்திற்கு ‘முட்டை’ நிதி? – மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு.

​திருச்சி மாவட்டம், முசிறி நகரின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகத்தின் சுற்று சுவர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அந்தப் போஸ்டரில் பெரிய அளவில் “முட்டை” படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் “முட்டை” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்கு கீழே, “பாஜக – அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி!” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

​2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும் மறைமுகமாக தாக்கும் விதமாக “முட்டை” தான் கிடைத்துள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி உள்ளது.

இதனை ​பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பார்த்து கடந்து சென்றனர். எந்த அரசியல் கட்சியின் சார்பில் ​யார் இந்த போஸ்டர்களை ஒட்டியது என்பது குறித்த விபரங்கள் அதில் இடம் பெறவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள், முசிறி பகுதியில் இன்று காலை முதல் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.