மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முசிறி எம்.எல்.ஏ. வழங்கினார்

0 102
Stalin trichy visit

திருச்சி, பிப்.9 மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முசிறி எம்.எல்.ஏ. வழங்கினார்

திருச்சி, பிப்.9   தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் (09.02.2026) திங்கட்கிழமை காலை அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பேரூராட்சித் தலைவர் சௌந்தரராஜன், துணைத் தலைவர் செல்வி கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.  பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முசிறி எம்.எல்.ஏ. வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.