ஓடும் பேருந்தில் பணத்தை திருடிய 3 பெண்கள் கைது

0 94
Stalin trichy visit

திருச்சி, பிப்.9 மணப்பாறை அருகே பேருந்தில் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் பணத்தை திருடிய மூன்று பெண்கள் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி (வயது 60). இவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள தனது மருமகளை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் செல்லும்போது தமிழரசி பர்சில் வைத்திருந்த 6000 ரூபாய் பணம் திருட்டு போனது. இதுகுறித்து தமிழரசி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்த போலீசார் அதே பேருந்தில் பயணம் செய்த மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், அச்சம்பட்டியை சேர்ந்த சரோஜா (வயது 62) அன்னக்கொடி (வயது 52), பிரேமா (வயது 40) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தமிழரசியின் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.