தனியார் நிறுவன செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவன செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி மற்றும் உயிர்கள் உடைமைகள் மீட்போம் பயிற்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆணை படியும் திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலர் உத்தரவின்படி புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் புள்ளம்பாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவன செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி மற்றும் உயிர்களையும் உடைமைகளையும் காப்போம் என்ற தலைப்பின் கீழ் பயிற்சி நிலைய அலுவலர் கோ செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி வீரர்கள் வெங்கடேசன் மணிகண்டன் முகமது சமீர் ச.வெங்கடேசன் முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது இப்ப பயிற்சியில் சுமார் 40 தனியார் நிறுவன செக்யூரிட்டி பாதுகாவலர்கள் கலந்து கொண்டுபயிற்சி பெற்றார்கள்.