துவாக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

0 130
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  கோரிக்கைளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 45க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி நுழைவாயில் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியும் வகுப்பை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு ஆணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

12 மாத சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளருக்கு ரூபாய் 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளகளுக்கும் பி.எஃப், மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இன்று முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை கையில் எடுப்போம் என கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.