பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம்

0 112
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரதபோராட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றவர்களுக்கான 5 சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டு, 1000-கணக்கான பார்வையற்றோர்களின் முன்னேற்றம் மற்றும் உரிமைகளை பெற்று வழங்குகின்ற அமைப்பாக சேவைபுரிந்து வருகிறது. எங்கள் கூட்டமைப்பின் மூலம் அரசுத்துறைகளில் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட தடையாக இருக்கும் அரசாணை எண் 24-ஐ திரும்ப பெற்றுக்கொண்டு அரசாணை எண் 20 மற்றும் 159-ன் அடிப்படையில் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ1500-ஐ, அண்டை மாநிலங்களில் வழங்கும் போல உயர்த்தி ரூ5000 ஆக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தின் வாயிலாக, தமிழக அரசை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.