நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 119
Stalin trichy visit

திருச்சி, பிப்.10  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். TNCSC எடை தராசு நியாய விலைக் கடையில் உள்ள விற்பனை நிலையத்தை நினைத்து சரியான எடையில் அத்தியாச பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஊதிய மாற்ற குழு விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளர் உதவும் எடையாளர்க்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் பிப்ரவரி 20-க்குள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளுக்கும் இடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும் தாயுமானவர் திட்டத்திற்கு உள்ள பிரச்சனைகளை களையப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் வியாழன் அன்று வேலை நிறுத்தம் செய்து வட்ட அளவில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.