மணப்பாறை அரசு கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

0 93
Stalin trichy visit

திருச்சி, பிப்.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலை வாய்ப்பு பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பாக அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பின் தொடக்கவிழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் மலர்மதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக் குனர் அருணகிரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர் கள் எவ்வாறெல்லாம் குறிப்பெடுத்து படிக்க வேண்டும் என விளக்கம ளித்தார். நிகழ்வில் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் சுதா, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்கு னர் பிரபாவதி, வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், திருச்சி மாவட்ட வேலை

வாய்ப்பு அலுவலர் மாசில் ஆஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலரும், இயற்பியல் துறை கௌரவ விரிவுரை யாளருமான முனைவர் சதீஸ்குமார் வரவேற்புரை யும், வணிகவியல் துறை கெளரவ விரிவுரையாளர் முனைவர் ராமச்சந்திரன் நன்றியுரையும் கூறினர். இந்நிகழ்வில் 230 மேற்பட்ட மாணவர்கள் கலந் துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.