மணப்பாறையில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

0 122
Stalin trichy visit

திருச்சி, பிப்.13 திருச்சி மாவட்டம்,மணப்பாறை ஒன்றியத்தில் சமூக  நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் 131 அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மணப்பாறை ஒன்றிய குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சுகந்தி தங்கராஜ் ஒருங்கிணைந்து நடத்திய சமுதாய வளைகாப்பு விழாவில் பயன்பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, நலுங்கு வைத்து வளையல் காப்பு வைபோகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், திமுக 24வது வட்டச் செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.

விழாவில், மருத்துவ அலுவலர் மரு.ஜனத் பாத்திமா, சமூக நல செவிலியர் சி.சவரியம்மாள், நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். பயன்பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பூலதட்டு, சீர்வரிசை, கையேடு அளிக்கப்பட்டது. பின் ஐந்து வகையான சாதத்துடன் விருந்து அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.