மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சி, பிப். 16 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த Tஉடையாபட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயம் முன்பாக உள்ள திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் ஜல்லிக்கட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றது. இதில் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.. காளைகளும் வீரர்களை தூக்கி வீசி வெற்றி பெற்றது. . வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர்.