புத்தக் கண்காட்சியில் சமூக ஆர்வலர் கே.சி.நீலமேகத்திற்கு பாராட்டு

0 118
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி திருவிழாவில்- 2026. சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான சமூக ஆர்வலர் கே.சி.நீலமேகம்  பாராட்டப்பட்டார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தி வரும் புத்தகக் கண்காட்சி விழா பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும் வரவேற்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக சமூக நலப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மரம் வளர்த்தல், நீர்நிலைகள் பாதுகாத்தல், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களை காப்பாற்றும் பணிகளில் தொடர்ந்து சேவை செய்து தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம்  சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் மாவட்ட நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி , கே.சி.நீலமேகத்திற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் சமூக சேவைகள் மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கி வருவதாகவும், இத்தகைய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணமூர்த்தி  கே.சி.நீலமேகம் மேற்கொண்டு வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை பாராட்டி, இவரது சேவைகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த பாராட்டு நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார், இனணச்செயலாளர் ஆர்.கே.ராஜா, மக்கள் சக்தி இயக்க துணைச் செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், முனைவர் ஜெயலட்சுமி, டாக்டர் லட்சுமி, அமிர்தம் அறக்கட்டளை யோக.விஜயகுமார், முனைவர்.நெடுஞ்செழியன், பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன், திருச்சி மாவட்ட துணை ஆட்சியாளர் சரவணகுமார்,  அல்லிராணி, மாவட்ட நூலக அதிகாரி சரவணன் திருச்சி மாவட்ட பல்வேறு துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நூலகத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.