மதுரைகாளியம்மன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
திருச்சி, பிப்.17 முசிறி அருகே தொட்டியத்தில் மதுரைகாளியம்மன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதுரைகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தகோயிலில் இன்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து மதுரை காளியம்மனுக்கு லட்டு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சந்தனகாப்பு சிறப்பு அலங்காரத்தில் மதுரை காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் உற்சவர் அம்மனுக்கும் மலர் அலங்காரம் நடைபெற்றது.
இதில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்கர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.