கடன் சுமை ஒரு பொருட்டல்ல முதல்வர் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார் – வைகோ பேட்டி

0 166
Stalin trichy visit

திருச்சி, பிப். 17 கடன் சுமை ஒரு பொருட்டல்ல முதல்வர் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார் – திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

தமிழக இடைக்கால பட்ஜெட் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை துவக்கப்பட்ட நாளிலிருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன்.
அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க அணில் அகர்வாவின் வேதாந்தா நிறுவனம்  மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இயந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மக்களுக்கு சுற்றுவட்டார மக்களை கொண்டு வந்து மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

காங்கிரஸ், இண்டியா கூட்டணியில் நீடிக்குமா ? நீடிக்காதா?என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்.

திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காது குத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளரே என்ற கேள்விக்கு இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை

தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.
மீண்டும் முதல்வர் ஆவார் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.