ஜி.ஹெச்.சிபவுண்டேசன் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

0 162
Stalin trichy visit

திருச்சி, பிப்.18  ஜி.ஹெச்.சிபவுண்டேசன் சார்பில்  அரசுப் பள்ளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் GHCL பவுண்டேஷன் (தியாகேசர் ஆலை) CSR திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி சல்மா  முன்னிலையில் மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள 14 அரசு பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின்ஸ் எரியூட்டும் இயந்திரம் மற்றும் மணப்பாறை பொது சுகாதாரத்துறைக்கு ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான மருத்துவப் பயன்பாட்டு உபகரணங்கள் தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இதில் நிபிசிலி பவுண்டேஷனில் இருந்து த.சுஜின், வெங்கடாசலம், பள்ளித் தலைமையாசிரியர் லதா, வட்டார மருத்துவ அலுவலர் கிரிஷ் குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.