சங்கிலியாண்டபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி
திருச்சி, பிப். 18 திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவிலில் 17 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் மகாசிவராத்திரியை முன்னிட்டு மணல்வாரித்துறை மயானத்தில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயான கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து சிம்மவாகனத்தில் எழுந்தருளிய பேச்சியம்மனை மயானத்திற்கு மேள தாளங்களுடன் ஊர்வலமாக வாகனத்தில் கொண்டுசென்றனர்.
பேச்சியம்மனுக்கு முன்னால் திருநங்கை கமலா, அங்காளம்மன்சாமி போல வேடமிட்டு ஆக்ரோஷத்துடன் ஆடியவாறு மயானத்திற்கு சென்றார். அங்கு
புதைக்கப்பட்டிருந்த பிணத்தை சூறையாடி தின்றார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மீண்டும் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்பதால், திரளான பக்தர்கள் நள்ளிரவில் மயானத்தில் திரண்டு ஆரவாரத்துடன் நடைபெற்ற மயானகொள்ளை நிகழ்ச்சியினை கண்டு பரவசமடைந்து வழிபட்டனர்.