தி.மு.க. அரசை கண்டித்து தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப்.18 பாஜக பட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்காக மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பி, நிதியை பட்டியல் மக்களுக்கு ஒதுக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், இட ஒதுக்கீட்டில் உரிமைகளை மதிக்காமல் ஆட்சி செய்யும் தி.மு.க.அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக பட்டியலனி மாநில தலைவர் சம்பத் ராஜ் மற்றும் திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட
என்.டி.ஏ கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக,பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.