20 நாட்களாக நெல்கொள் முதல் செய்யாத அவலம் : போராட்டம் அறிவித்ததும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

0 112
Stalin trichy visit

திருச்சி, பிப். 18  மணப்பாறை அருகே 20 நாட்களை கடந்தும் நெல் கொள்முதல் செய்யப்படாத அவலம் – போராட்டம் அறிவித்ததும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர். ஆனால் இதுவரை நெல்கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கான நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இதனால் இன்று நெல்கொள்முதல் செய்திட வேண்டும் என்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இயந்திரம் பழுது ஏற்பட்டதால் தான் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. உடனே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.