அனைத்து குயவர்கள் நல சங்கம் மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழா
திருச்சி, பிப்.19 திருச்சியில் அகில இந்திய குயவர் உரிமை கட்சி, அனைத்து குயவர்கள் நல சங்கம் மாநில மாநாடு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
அகில இந்திய குயவர் உரிமை கட்சி, அனைத்து குயவர்கள் நல சங்கம் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவில் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இந்த மாநில மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பெருமாள் பிச்சை பந்தல்கால் நட்டு வைத்து, மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் அகில இந்திய குயவர் உரிமைக்கட்சி தேசிய தலைவர் சாலை சாதியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி அனைத்து குயவர்கள் நலச்சங்கம் தேசிய தலைவர் சாலை சத்யன், மாநிலத் தலைவர் சாலை செல்வமணி மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
இந்த மாநில மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.