புதூர் உத்தமனூரில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராம மதிப்பீட்டு முகாம்

0 109
Stalin trichy visit

திருச்சி, பிப். 23  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதூர் உத்தமனூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களால் கிராம மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.

லால்குடி அருகே புதூர் உத்தமனூர் கிராமத்தில் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் கிராம பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர்.
அப்போது கிராமத்தின் வரைபடம், வள வரைபடம்,கல்வியறிவு விகிதம்,மக்கள் தொகை விகிதம்,சிறு, குறு, பெரு விவசாயிகள் விகிதம்,காலக்கோடு, கிராமத்தின் பிரச்சனை மரம் மற்றும் தீர்வு வரைபடம் போன்ற வரைபடங்களை மாணவர்கள் வரைந்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் புதூர் உத்தமனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

Leave A Reply

Your email address will not be published.