சொன்னதை செய்தவர் தமிழக முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

0 193
Stalin trichy visit

திருச்சி, பிப். 23 திருச்சி காட்டூர் எஸ்.ஐ.டி அம்பிகாபுரம் அருகே தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டடம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமை வகித்து பேசுகையில்,

தமிழ்நாடு முழுவதும் இது போன்ற பரப்புரையை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.  தமிழ்நாட்டினுடைய துணை முதலமைச்சர்  தலைமையில் அங்கே உலகத் தாய்மொழி தினத்தை நாம் கொண்டாடிவிட்டு,   உங்கள் முன்எதற்காக ஸ்டாலின் தொடர வேண்டும்?  தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய் வழங்குவது தொடர வேண்டும். மாதம் ரூ.1000 வழங்குவது தொடர வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1000, ஜூன் மாததத்திற்கு பிறக்கு அது 2000 ரூபாயாக வழங்கப்படும் என்று சொன்னாரே அது தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும்.

இப்பவும் ரூ.1000க்கு இருக்கக் கூடிய சென்ட்மெண்ட் நாம் வந்து 2021 காலத்தில் காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் 2020ம் ஆண்டு சொன்னாரு கொரோனா நிதி என்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நீங்கள் வழங்க வேண்டும் என்று சொன்ன போது எதிர்க்கட்சியாக உட்கார்ந்துட்டு நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்க ஆட்சிக்கு வந்து பாருங்க அப்பத்தான் தெரியும் என்று சொல்லிவிட்டு வெறும் 1000 ரூபாய் மட்டும் தந்தார்.

அன்றைக்கே தமிழ்நாட்டினுடைய இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் எழுந்து சொன்னார், ‘கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும், மீதம் இருக்கின்ற 4000 ரூபாயை இந்த முத்துவேல் ஸ்டாலின் முதலமைச்சராகி தருவேன்’ என்று சொன்னார். அந்த 1000 – 4000 சென்டிமென்ட் இப்போ திரும்பவும் வருது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் சொன்ன மாதிரி ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ அப்படின்னு சொன்னாருங்க பாத்தீங்களா அதெல்லாம் இப்போ நடக்கப்போகுது என்பதற்காக சொல்றேன். ஏன் ஸ்டாலின் தொடர வேண்டும்? ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுதும் 20 லட்சம் புள்ளைங்க வயிறார சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு போறாங்க பாத்தீங்களா, அந்த திட்டம் தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக ஏறத்தாழ 42 லட்சம் பேர் பயன்பட்டு அதுல கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் பேர் இன்னைக்கு வேலைக்கு போயிருக்காங்க பாத்தீங்களா, அந்த திட்டம் தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும். இன்னைக்கு ஒட்டுமொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இங்கே கொண்டு வந்து ஏறத்தாழ நேரடியாகவும் மறைமுகமாகவும் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறோம் பாத்தீங்களா, அது தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும் என்று கூறினார்.

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பத்திரிகையாளர் செந்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், வன்னை அரங்கநாதன், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.

 

.

Leave A Reply

Your email address will not be published.