பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அடிக்கல் நாட்டினார்
திருச்சி, பிப்.23 திருவெறும்பூர் அருகே உள்ள பழங்குனங்குடியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ்
2025 -2026 ஆம் நிதி ஆண்டில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அடிக்கல் நாட்டினார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடிக்கு பூலாங்குடி காலணியில் இருந்து செல்லும் சாலையில் புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் நீர் ஒழுங்கியோடு உள்ளது. இந்த வாய்க்கால் பாலம் அகலம் மிகவும் குறுகிய பாலமாக உள்ளதால் அப்பகுதியில் வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. இதனால் இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் சல்மா (எ) ராஜாத்தி தனது உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆம் ஆண்டு ரூ 1.50 கோடி நிதி ஒதுக்கி கொடுத்தார்.
அதன் அடிப்படையில் புதிய பாலம் நீர் ஒழுங்கியுடன் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இந்த விழாவில் தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் எம் பி சல்மா (எ ) ராஜாத்தி, திருச்சி டி ஆர் ஒ பாலாஜி,உதவி செயற்பொறியாளர் ரேக்கா, செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் வினோத் .திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன். கழக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.