திருவெறும்பூரில் முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 143
Stalin trichy visit

திருச்சி,பிப். 23 திருவெறும்பூரில் முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பெரும் முயற்சியினால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்ட பணிகளின் தொடக்க விழாவும் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதியதாக அமையவிருக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது

மாநகராட்சி மண்டலம் மூன்றிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பணிகளின் திட்ட மதிப்பு ரூபாய் 750.05 ஆகும். பகுதிகளில் புதிய மின்மாற்றிகளும் மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து வைக்கப்பட்டது.  நவீன கழிப்பிடம் பாப்பாகுறிச்சி, அங்கன்வாடி மையம் (சுற்றுச்சுவர்) பாப்பாகுறிச்சி. நியாய விலைக் கடை கணேஷ் நகர். மின்மாற்றி துவக்க விழா கணேஷ் நகர். மஞ்சதிடல் மயான சுற்றுச்சுவர் மஞ்சதிடல். ஸ்ரீ நகர் மின்மாற்றி ஸ்ரீ நகர். மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டிடம் – கீழக்கல்கண்டார் கோட்டை, அங்கன்வாடி மையம் திறப்பு விழா – காவிரி நகர். தெற்கு உக்கடை அரசு நடுநிலைப் பள்ளி புதிய கட்டிடம் 

திட்டம்: பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (School Improvement Scheme). தெற்கு உக்கடை அங்கன்வாடி மையம் மையங்கள் . செந்தண்ணீர்புரம் மின்மாற்றி (Transformer) மின்மாற்றி இடம்: திரு.வி.க. தெரு செந்தண்ணீர்புரம் மின்மாற்றி (Transformer) ஆஷா தெரு மின்மாற்றி சங்கிலியாண்டபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை).

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவக்குமார், செந்தில், தாஜுதீன், ரெக்ஸ், சுரேஷ், திருச்சி டி ஆர் ஒ பாலாஜி,உதவி செயற்பொறியாளர் , திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி. மேற்குத் தாசில்தார் விக்னேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை, பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.